ADVERTISEMENTS
1.இயக்குநர் ஷங்கர் - நான் இதுவரைக்கும் எடுத்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட்ஸ்,ஒரு படம் கூட இது வரை ஃபிளாப் ஆனதில்லை.
விஜய் - அது நேத்து வரைக்கும்,இப்போதான் என்னை வெச்சு 3 இடியட்ஸ் படம் பண்றீங்களே,மறந்துட்டீங்களா?
2.டைரக்டர் - படத்துக்கு கதை என்னனு முடிவு பண்ணியாச்சு.
விஜய் - முதல்ல டைட்டிலை முடிவு பண்ணுங்க சார்,என் படத்துல யாரும் கதையை எதிர்பார்க்க மாட்டாங்க.
3.விஜய் - தீபாவளிக்குள்ள என் படம் ரிலீஸ் ஆகிடுமா?
புரொடியூசர் - அது தாராளமா ரிலீஸ் ஆகிடும்,ஆனா படம் ரிலீஸ் ஆனதும் வெட்டு,குத்துனு கலவரம் ஆகி நீங்கதான் உள்ளே போயிடுவீங்கனு நினைக்கிறேன்.
4.விஜய் - அப்பா,அந்த புரொடியூசரை பகைச்சுக்க வேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா?இப்போ பாருங்க,பட போஸ்டர்ல உலக சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக 5 மெகா ஃபிளாப் குடுத்த விஜய் நடிக்கும்னு பட விளம்பரம் குடுத்திருக்கறதை...
5. விஜய் சார்,படத்துக்கு டைட்டில் காவலன் அப்படினு வெச்சுருக்கீங்க,கதைப்படி ஹீரோயினுக்கு நீங்க பாடிகார்டு,ஓகே,படம் பார்க்க வர்ற ஆடியன்சுக்கு யார் பாடிகார்டு?
6.அரட்டை அரங்கம் விசு விஜயை ஹீரோவா போட்டு படம் எடுத்தா என்ன டைட்டில் வைப்பாரு?
காவலன் அவன் கேவலன்
7.ஷங்கர் சார்,3 இடியட்ஸ் படத்தை ரீமேக் பண்ணப்போறீங்களாமே,ஹீரோஸ் யாருனு முடிவு பண்ணீட்டீங்களா?
ஒரு இடியட் மட்டும் இப்போதைக்கு முடிவாகி இருக்கு.(கமிட் ஆகி இருக்கு)
8.விஜய் - டைரக்டர் சார்,இந்தப்படத்துல நான் அரசியல்ல இறங்கற மாதிரி பாலிடிக்ஸ் பஞ்ச் டயலாக்ஸ் பேசி இருந்தேன்,ஏன் கட் பண்ணீட்டீங்க?
டைரக்டர் - இது சீரியஸ் படம்,இதுல காமெடி பண்றதுக்கு இடம் இல்லை.
9.எஸ்.ஏ.சந்திரசேகர் சார்,உங்க பையனை வெச்சு ஒரு சொந்தப்படம் எடுக்கறீங்களாமே?
எனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?அவ்வளவு ரிஸ்க் எடுக்க,வேற புரொடியூசரா சிக்காம இருக்காங்க?
10..விஜய் - 5 படங்கள் தொடர்ந்து ஊத்திக்குச்சு,6வது படமும் ஃபிளாப் ஆனா என் எதிர்காலம் என்னாகும்?100 படத்தை நான் டச் பண்ண முடியுமா?
விடுங்க .6வது படமும் ஃபிளாப் ஆனா ஆறுலயும் சாவு,நூறுலயும் சாவு அப்படினு மனசை தேத்திக்க வேண்டியதுதான்.
Post Title → விஜய்- அதிர்ச்சி தரும் எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்
ADVERTISEMENTS